நாட்டில் 7 லட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளியான தகவல்.!

தற்போது நாட்டில் 7 இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படாமல் தேங்கிக் கிடப்பதாகப் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.


புதியதாக இரண்டு அச்சிடும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அச்சிடும் பணிகள் இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இந்த நிலுவையில் உள்ள அனைத்து அட்டைகளையும் ஆறு மாதங்களுக்குள் அச்சிட்டு முடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதியது பழையவை