வேன் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்து.!

கால்வாயில் கவிழ்ந்து வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (13.12.2025) ஆம் திகதி பிற்பகல் 11.00 மணியளவில் பொலன்னறுவை ZD பிரதான இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது வேனில் நான்கு பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் ஒருவர் காயமடைந்து மனம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை