ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி !



ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பீ விஜேவீரவினால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்துப்பூர்வமாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் பொதுமக்களுடன் தொடர்புபட்டுள்ளதுடன் நாட்டின் பல்வேறு பாகங்களுக்கு பயணம் செய்கின்ற நிலையில் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குவது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதியது பழையவை