ஹெல்பிங் வின்ங்ஸ் கல்குடா அமைப்பு மற்றும் ஓட்டமாவடி ஹுதா ஜும்மா பள்ளியவாயல் என்பன இணைந்து இணைந்து நடத்திய இரத்ததான முகாம் நேற்று (சனிக்கிழமை) முழுநாளாக இடம் பெற்றது.
மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவதற்கு உதவுமாறு இரத்த வங்கியினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க இரத்த தானத்திற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஓட்டமாவடி ஹுதா ஜும்மா பள்ளிவாயலில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி அதிகாரிகள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் 115 பேர் இரத்ததானம் வழங்கினர்.
இதற்கு உதவி புரிந்த அனைவருக்கும் ஹெல்பிங் வின்ங்ஸ் கல்குடா அமைப்பினர் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.