அத்துடன் காகித்தின் விலையும் 30 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் டிலான் சில்வா தெரிவித்தார்.
கொள்கலன்களின் பற்றாக்குறை காரணமாக காகித இறக்குமதிக்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சீனா, இந்தியா, இந்தோனேசியா மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து பெரும்பாலான காகிதங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தநிலையில் இந்தியாவிலும் காகித பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட கால குத்தகை அடிப்படையில் ஏற்றுக் கொண்டுள்ள விடயங்களை அச்சிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது இருப்பிலுள்ள காகிதங்கள் சிறிது காலத்திற்கு மாத்திரமே பயன்படுத்த முடியுமெனவும் இலங்கை அச்சிட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் டிலான் சில்வா தெரிவித்தார்.