பாமர விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு பிரதான வீதி முடக்கப்பட்டது




பாமர விவசாயிகளால் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக சுமார் 3 மணிநேரம் மாத்தறை - கொழும்பு பிரதான வீதி முடக்கப்பட்டது.

யானைகளை பராமரிப்பதற்காக விவசாயக் காணிகளை அரசாங்கம் கபளீகரம் செய்துள்ளதாக அறிந்த விவசாய மக்கள், கடந்த 53 தினங்களாக முன்னெடுத்த உணவுத் தவிர்ப்புப் போராட்டம் சமல் ராஜபக்ச வழங்கிய உறுதிமொழியை அடுத்து கைவிடப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் மீண்டும் பூதாகாரமாக வெடித்தது.

இந்த அரசாங்கம் தங்களை ஏமாற்றுவதாக குற்றம்சாட்டி, நேற்று முன்தினம் மீண்டும் இருவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, நேற்றையதினம் விவசாயிகள் அம்பலாந்தோட்டை நகரை மறித்து பாரிய போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

கோட்டாபய அரசாங்கத்தின் கோட்டையான அம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை போன்ற இடங்களில் இவர்களுக்காக நேரடியாகச் சென்று வாக்குச் சேகரித்த பிக்குகளும் இணைந்து பாதையை மறித்து, போராட்டதை முன்னெடுத்து வருகின்றமை இந்த அரசாங்கத்திற்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யானைக்கும் மனிதனுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்துவதற்காக இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் அம்பாந்தோட்டை தொடக்கம் கொழும்பு வரை விவசாயிகள் பேரணியாக செல்வதாகவும் எச்சரித்துள்ளனர்.

அதிகளவிலான சிங்கள மக்களின் வாக்கில் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் சிங்கள மக்களால் தற்போது ஆட்டங்கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
புதியது பழையவை