மட்டக்களப்பை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடந்த சுமார் 8, 6 ,5 வருடங்களாக பொலன்னறுவை, கொழும்பு, திருகோணமலை,அம்பாறை போன்ற பல இடங்களில் மிகுந்த கஸ்டத்தின் மத்தியில் கடமையாற்றி வருகின்றனர். எனினும் இவர்கள் இம்முறை புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை நிரந்தர நியமனம் வழங்கும் போது தமக்கு சொந்த ஊருக்கு இடமாற்றம் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் இருந்தனர்.இம்முறையும் அவர்களுகளுக்கு கிடைத்தது ஏமாற்றமே. எனவே பல இன்னல்களுக்கு மத்தியில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நல்லதோர் தீர்வு கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் முன்வரவேண்டும்.
தெடர்ந்தும் புறக்கணிக்கப்படும் மட்டக்களப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்!
Battinatham.com