மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான் பிரதேசத்தில் இயங்கி வரும் உதயகுமார் கல்வி நிலையத்தினால் "வளர்ச்சியின் உச்சநிலை கல்வி" எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள்,பாடசாலை மாணவர் தலைவர்களுக்கான சீருடை,மற்றும் ம/மமே/வலய க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்குரிய ஆங்கில பாடசாலை மேம்பாட்டுக்கு உரிய கையேடுகள் தயாரித்து வழங்குவதற்கு நிதியுதவி வழங்கி வைப்பு .
19/03/2021 இன்றைய தினம் "வளர்ச்சி யின் உச்சநிலை கல்வி " எனும் தொனிப்பொருளில் உதயகுமார் கல்வி நிலையத்தினால் ம/ம மே/கற்சேனை அ.த.க பாடசாலையில் மிகவும் வறுமை நிலையில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு இரண்டு துவிச்சக்கர வண்டிகள்,பாடசாலை மாணவர் தலைவர்களுக்கான சீருடை வழங்குதல்,ம/மமே வலய க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்குரிய ஆங்கிலப்பாட மேம்பாட்டு கையேடுகள் தயாரித்து வழங்குவதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திரு.க.சிறிதரன்,ம/மமே/ வலய ஆங்கில பாட சேவைக்கால ஆலோசகர் திரு.வே.திவாகரன்(IAS) முன்னிலையில் அக்னிச் சிறகுகள் தலைமை ஒருங்கிணைப்பாளரும்,உதயகுமார் கல்வி நிலையத்தின் செயலாளருமான திரு.ம.ஜெயக்கொடி,பொருளாளர் திருமதி அனோஜன் விதுசா,இணைப்பாளர் திரு.சோ.சிவாகரன்,இணைப்பாளர் செல்வி வெ. லக்சனா ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.