பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இன்று(11) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதன்முறையாக விஜயம் செய்தார்.
மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் பொலிஸ் மா அதிபர் கலந்து கொண்டார்.
மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை கந்தளாய் ஆகிய பொலிஸ் பிராந்தியங்களைச் சேர்ந்த பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிசேரஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் அத்தியட்சகர்கள் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மாகாணத்திலுள்ள 48 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.