இருவர் நீரில் மூழ்கி பலி





மாவனெல்லை, போவெல்ல பகுதியில் நீராட சென்ற 7 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

24 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

7 பேர் அடங்கிய குழுவொன்று மாவனெல்லை, போவெல்ல பகுதியிலுள்ள மாஓயாவில் நீராட சென்றுள்ளனர்.

உயிரிழந்த இளைஞர்கள் இருவரினதும் சடலங்கள் மாவனெல்லை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மாவனெல்லை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை