மட்டக்களப்பு மாநகர சபையினால் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டன






மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் திரு.மா.தயாபரன் அவர்களின் துரித முயற்சியினால் மட்டக்களப்பு மன்ரேசா கிராம வீதிக்கு ஒன்பது வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மன்ரேசா கிராம மக்களின் வேண்டுகோளை ஏற்று கிறேஸ் லைப்லைன் (GRACE LifeLine) தொண்டு நிறுவனத்தின் ரூபா 45,000 நிதி அனுசரணையோடு மாநகர ஆணையாளரின் வழிநடத்தலில் நேற்று இவ்வீதிக்கு குறித்த விளக்குகள் பொருத்தப்பட்டன.

குறித்த பணியின்போது கிறேஸ் லைப்லைன் (GRACE LifeLine) தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திரு.எஸ்.ரமணதாஸ் அவர்களும் சமூக ஆர்வலர் திரு.சு.சியாந் அவர்களும் கலந்துகொண்டனர்.

இதேவேளை இவ்வீதியால் இரவுநேர பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்கள் நீண்டகாலமாக வீதி விளக்குகள் இல்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை