ஆசிரியை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு




தவறுதலாக மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து சென்ற ஆசிரியை தவறுதலாக தவறி விழுந்து படுகாயம்மடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுவாஞ்குடி கடற்கரை வீதி செட்டிபாளய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாயான சந்திரமோகன் சியாமளா என்பவரே கடந்த 5ம் திகதி தனது உறவினர் ஒருவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பார்ப்பதற்கு தனது கணவருடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து சென்று கொண்டு இருக்கும் போது மட்டக்களப்பு தாழங்குடா பிரதான வீதியில் தவறுதலாக தவறி விழுந்ததில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த (9) உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை காத்தாங்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை