மட்டக்களப்பில் குடும்பஸ்தர் பலி




குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினால் மனைவி பிள்ளைகள் தாக்கியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆறுமுகத்தாக்குடியிருப்பு பாரதி வீதியினைச் 38 வயதுடைய சேர்ந்த கணேஷ் குணராசா என்பவருக்கும் மனைவி பிள்ளைகளுக்கும் இடையில் நேற்று இரவு ஏற்பட்ட தகராற்றினால் மனைவி பிள்ளைகள் குறித்த நபரினை தாக்கியதில் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் க.ஜீவராணி சம்பவ இடத்தினை பார்வையிட்ட பின்னர் விசாரணைகளை மேற்கொள்ளும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் பிள்ளைகள் மற்றும் மனைவி ஆகியோர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை