சா்வதேச மகளீா் தினத்தை முன்னிட்டு இன்று போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளா் ஆா்.ராகுலநாயகி அவா்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வு “ நாடும் தேசமும் உலகமும் நீயே” என்னும் தொனிப்பொருளில் சா்வதேச மகளீா் தினம் இடம்பெற்றது இன்றைய தினம் உறுதுணையாக நின்று தமது குடும்பத்தை கட்டியெழுப்பிய திருமதி செல்வமணி அவருடைய கணவா் கோவிந்தபிள்ளை அவா்களையும் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.விவேகானந்தம் திருமதி வைரதி ரமேஸ் முகாமையாளர் இலங்கை வங்கி வெல்லாவெளி, திருமதி டயானா பானுரேகா ரதன் முகாமையாளர் இலங்கை வங்கி பழுகாமம், திருமதி அர்ச்சனா பிரகாஸ் முகாமையாளர் மக்கள் வங்கி பழுகாமம், திருமதி ஜதுர்ஸ்னா சதீஸ்குமார் கால்நடை வைத்தியர் தும்பங்கேணி , திருமதி கீர்த்திகா நிசாந்தன் ஆயுர்வேத வைத்தியர் முனைத்தீவு, திருமதி விஜயலெட்சுமி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் வெல்லாவெளி இவர்களை இன்றைய தினம் பாராட்டி கௌரவிக்கப்பட்டது.