மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுளை பகுதியில் துருப்பிடித்த நிலையில் இருந்த ரி56 ரக துப்பாக்கி, நேற்று (08) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொத்தியாபுளை கிராமத்தில் வாழ்கின்ற சுமார் 412 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
இந்த நீர் வழங்கும் திட்டத்துக்கு வடிகான்கள் தோண்டும் நடவடிக்கைகயில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த வேளையில் மேற்படி துப்பாக்கி இருப்பதை அவதானித்துள்ளதாக வவுணதீவு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர் .
அதனைத் தொடர்ந்து குறித்த இடத்துக்கு வருகை தந்த வவுணதீவு பொலிஸார், துப்பாக்கியை மீட்டுள்ளனர்.