சரத் விஜேசிங்க மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம்




பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் காரியாலய இணைப்பதிகாரி சரத் விஜேசிங்க இன்று  மட்டக்களப்பு மாவட்ட ஓட்டமாவடி பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்டார்.

பொதுஜன பெரமுனவின் கல்குடாப் பிரதேச பிரதம செயற்பாட்டாளர் ஏ.முஸ்தபா லெப்பை தலைமையில் பொதுஜன பெரமுனவின் ஓட்டமாவடி காரியாலயத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் நீர் வழங்கல் அமைச்சரின் கல்குடாத் தொகுதி இணைப்பதிகாரி யூ.எல்.ஜவாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவ் விஜயத்தில் கட்சியின் செயற்பாடுகள், மாகாண சபைத் தேர்தல் முன்னெடுப்பு மற்றும் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், மிக விரைவில் பிரதமருடன் நேரடிச் சந்திப்பினை மேற்கொள்வதற்கான ஏற்பாடு தொடர்பிலும் உறுதியளிக்கப்பட்டது
புதியது பழையவை