அன்னைபூபதியின் 33வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு


மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 33ஆவது நினைவு தினம் 19.04.2021 திங்கட்கிழமை இன்று அவரது சமாதியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் அனுஷ்டிக்கப்பட்டது. 

குறித்த நினைவேந்தலில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்தின்,ஞா.ஶ்ரீநேசன், மட்டு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்கள் ஏறாவூர் பற்று தவிசாளர் சர்வாணந்தன்,முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நடராசா,ஆகியோரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியுடன் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. 

 1988.03.19 ஆம் திகதியிருந்து 1988.04.19 வரையில் உண்ணா விரதமிருந்து அன்னை பூபதி உயிர்நீர்த்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை