கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரன் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்கவுள்ளமை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடல் ஆலய மண்டபத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், எஸ்.சிறிதரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.