மிகவும் சிரமப்படுவதாக இலங்கை கிராம சேவகர் சங்கம் தெரிவித்துள்ளது



 
சிங்கள-தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் உட்பட 7 வகையான குடும்ப பிரிவிக்கு குடும்பத்துக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கும் திட்டம் நேற்று அரசினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திடீரென ரூ. 5 ஆயிரம் கொடுப்பனவு வழங்குவதற்கான அரசின் முடிவால் மிகவும் சிரமப்படுவதாக இலங்கை கிராம சேவகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய கிராம சேவகர் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிக்கற, இந்த ஐயாயிரம் ரூபா பகிர்ந்தளிக்கும் விவகாரத்தை பொறுப்பேற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

புத்தாண்டுக்கு இன்னும் ஒரு நாள் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், அவசர அவசரமாக கொடுப்பனவை வழங்குமாறு அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் உத்தரவிடுவது ஏமாற்றமளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்
புதியது பழையவை