மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறந்துரைச்சேனையில் பிரபல கஞ்சா வியாபாரி ஒருவரை நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை ராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிசாருடன் இணைந்து சம்பவ தினமான நேற்று இரவு குறித்த வியாபாரியை பின் தொடர்ந்த வேளையில் கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற போது சுற்றி வளைத்த நிலையில் இக் கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த வியாபாரி நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 42 வயதுடைய நபர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
கைதானவரை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்