இந்நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி இறைவணக்கம்,தமிழ்மொழி வாழ்த்து,வரவேற்புரை,தலைமையுரையுடன் நிகழ்வு ஆரம்பமானது.இந்நிகழ்விற்கு வருகை தந்த முதன்மை அதிதியான மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் ஓய்வுநிலை தமிழ்பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் த.யுவராஜன் வித்தியா சஞ்சிகையை மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமாருக்கு வழங்கி வெளியீட்டு வைத்தார்.அத்துடன் பிரதிக்கல்வி பணிப்பாளர்களான பீ.கரிகரராஜ்,திருமதி.சாமினி ரவிராஜ்,திருமதி.தேவரஜனி உதயாகரன்,திருமதி.சரண்யா சுபாகரன், மண்முனை வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் திருமதி ளு.P.ரவிச்சந்திரா மற்றும் உதவிக்கல்வி பணிப்பாளர்களுக்கும்,ஆசிரிய ஆலோசகர்களுக்கும்,அதிபர்களுக்கும் சஞ்சிகை வழங்கி வெளியீட்டு வைக்கப்பட்டது.
இவ்வாறு வெளியீட்டு வைக்கப்பட்ட சஞ்சிகையின் அறிமுக உரையினை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் தமிழ்பாட ஆசிரியை கலாநிதி சந்திரா தயாகாந்தனும்,ஏற்புரையை திருமதி.சு.டெ.றாகலும் நிகழ்த்தினர்.மட்டக்களப்பு கல்வி வலயத்தின் தமிழ்பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் இ.ஜோ.பிரபாகரனின் நன்றியுரையுடன் சஞ்சிகை வெளியீட்டு விழா இனிதே நிறைவுபெற்றது.
இந்நிகழ்வில் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள்,உதவிக்கல்வி பணிப்பாளர்கள்,கோட்டக்கல்வி பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,அதிபர்கள் கலந்துகொண்டார்கள்.