அதிகளவு சுற்றுலாப்பயணிகள் நுவரெலியாவுக்கு வருகை.


புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நகருக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக நுவரெலிய மாநகர சபை முதல்வர் சந்தனலால் கருணரத்ன தெரிவித்துள்ளார்.

இதுவரை காலத்தில் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் விடுதிகள் நிறைந்துள்ளன என அவர் தெரிவித்தார்.

இவர்கள் நுவரெலியாவுக்கு வருகை தருவதற்கு முன்னர் தங்கியிருந்த பகுதிகள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலாத்துறை பாரிய நெருக்கடியைச் சந்தித்த நிலையில் நுவரெலியாவுக்கு அதிகளவானோர் பயணித்துள்ளனர்.
புதியது பழையவை