இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.




கொவிட் - 19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை வழங்கும் நிகழ்வு இன்று (30) இடம்பெற்றது.

இதன் போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் உட்பட வைத்திய அதிகாரிகள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஏனைய ஊழியர்கள் தடுப்பூசிகளை ஏற்றி கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 4800 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





புதியது பழையவை