மின்சார சபை ஊழியர்கள் மீது பொது மக்கள் தாக்குதல்


மின் கம்பம் ஒன்றை நாடுவது தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது. இதன்போது மின்சார சபை ஊழியர்கள் மீது பொது மக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின் கம்பத்தை நிறுவுவது தொடர்பான தகராறு காரணமாக இலங்கை மின்சார சபையுடன் இணைக்கப்பட்ட பணியாளர்கள் கிராமவாசிகளால் தாக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சரியான தரமின்றி மின் கம்பங்களை நிறுவியுள்ளதாக கிராமவாசிகளால் குற்றம் சுமத்தியுள்ளனர். இது குறித்த விவாதத்தின் போது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை