ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் பணத்துடன் பெண்ணொருவர் பொலிஸாரிடம் சிக்கினார்


பொரளை - மகசின் வீதியில் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 4 இலட்சத்து 13 350 ரூபாய் பணத்துடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகசின் வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு தெற்கு பிரிவுக்குச் சொந்தமான குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயின் மற்றும் பணத்துடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது , பொரளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடமிருந்து 245 கிராம் 450 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 4 இலட்சத்து 13 ஆயிரத்து 350 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரான பெண் மேலதிக விசாரணைகளுக்காக பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பொலிஸார் அவர் தொடர்பான மேலதி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
புதியது பழையவை