தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருட்கள் பொலிகண்டியில் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை யாழ் - பொலிகண்டி புதுவளவு என்ற இடத்திலேயே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
வெடிபொருள்களை செயலிழக்க வைப்பதற்கான தொழில்நுட்பத் திறன் தொடர்பில் கண்டறியப்படாத நிலையில் சிறப்பு அதிரடிப்படையின் உயர்மட்டப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.