நாளைய தினம் அரைநாள் விசேட வங்கி விடுமுறை தினமாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
உலக தொழிலாளர் தினம் மே மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை நாளில் வருகின்றது. இதன் காரணமாக நாட்டில் உள்ள சகல வங்கிகளுக்கும் நாளைய தினம் அரை நாள் விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளைய தினம் கொழும்பு பங்கு சந்தையின் தினசரி கொடுக்கல் வாங்கல் பிற்பகல் 12.30 மணி வரை மாத்திரமே மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.