யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறை அல்வாய் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்ற மோதலில் குடும்பத்தலைவர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
அல்வாயை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முருகராசா கௌசிகன் (வயது 31) என்பவரே உயிரிழந்தார்.
அல்வாய் வடக்கு முத்துமாரி அம்மன் கோவிலடியில் உறவினர்களுக்கு இடையில் காசு கொடுக்கல் வாங்கல் பிரச்னை இன்றைய தினம் மதியம் வாய் தர்க்கமாக ஆரம்பித்து வாள்வெட்டில் முடிவடைந்தது என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.