நாட்டில் கொழும்புக்கு ஒரு சட்டமும், யாழ்ப்பாணத்துக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் இராஜமாணிக்கம் சாணக்கியன் கேள்வியெழுப்பினார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பிரதேசசபை தவிசாளர்கள் பலர் எங்களை தொடர்புகொண்டு பேசுகின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டால் மக்கள் பிரதிநிதிகள் எவ்வாறு செயற்ப்படுவது என கேட்கின்றனர். என்னை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு செஹான்சேமசிங்க தெரிவித்தார். அதேபோன்று யாழ் மேயர் கொழும்பில் உள்ள நடைமுறையையே அவர் அங்கு நடைமுறைப்படுத்தியுள்ளார். கொழும்பில் நீலநிற ஆடையில் உள்ளவர்களே பற்றுசீட்டுக்களை தருகின்றனர். அதனையே அவரும் அங்கு செய்துள்ளார். கொழும்புக்கு ஒரு நீதி யாழுக்கு ஒரு நீதியா.