மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியையடுத்து 1313 பேராக அதிகரித்துள்ளதாக இன்று புதன்கிழமை (12) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர். நா.மயூரன் தெரிவித்தார்.
அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேருக்கும், ஓட்டுமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேருக்கும், வாழைச்சேனை, பட்டிப்பளை, செங்கலடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவர் உட்பட 3 பேருக்கும். களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் உட்பட 28 பேருக்கு கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது .
இதில் கொரோனா தொற்றினால் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்த இருவரின் நேரடி தொடர்புடைய உறவினர்களான ஆரையம்பதியில் 7 பேருக்கும், அவ்வாறே மட்டக்களப்பு மாங்கத்தில் 7 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது
இதேவேளை மாவட்டத்தில் 3 வது கொரோனா அலையில் 330 பேராக அதிகரித்துள்ளதுடன் மாவட்டத்தில் 1313 ஆக அதிகரித்துள்ளதுடன் 16 உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.