மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 55கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.
கடந்த 24மணி நேரத்தில் 530 ரபீட் அன்டிஜன் மற்றும் பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் வாழைச்சேனை பிரதேசத்தில் 25கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 55பேர் கொரனா தொற்றுக்குள்ளானது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனடிப்படையில் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 08பேரும் களுவாஞ்சிகுடி சுகாதார பிரிவில் 03பேரும் ஆரையம்பதி சுகாதார பிரிவில் 03பேரும் சுகாதார பணியாளர்கள் 04பேரும் சிறைக்கைதிகள் 02பேருமாக 55பேர் கொரானா தொற்றுக்குள்ளானதாகவும் அவர் தெரிவித்தார்.
இறுதி வாரத்தில் 235 கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மூன்றாவது அலையின் காரணமாக இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 7268 அன்டிஜன் மற்றும் பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 587பேர் இதுவரையில் கொரனா தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 12பேர் மரணமடைந்துள்ளதாகவும் பணிப்பாளர் டாக்டர் மயூரன் தெரிவித்தார்.