இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 4455 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300,000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 24 மணித்திலாயத்தில் இந்தியாவில் 222,835 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26751681 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை பொது வெளியில் தகனம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.