42 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கோவிட் தொற்று உறுதி






திருகோணமலை மாவட்டத்தில் இன்றுவரையில் 42 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை சுகாதார சேவைகள் பணியகத்தினால் இன்று 31-05-2021ம் திகதி காலை 10 மணியளவில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் 3363 பேர் இதுவரை கோவிட் - 19 தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ள நிலையில், கடந்த மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை 1922 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் இன்று வரை 84 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கந்தளாய் வைத்தியசாலையில் 69 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜீ.எம்.கொஸ்தா தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை