மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த திங்கள் முதல் வியாழன் வரையான நான்கு நாட்களில் கொரோனா தொற்றினால் மரணித்த 46 உடல்கள் ஓட்டமாவடி - மஜ்மா நகர்ப்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் குறித்த இடத்தில் நேற்று மாத்திரம் 8 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
இதில், முஸ்லிம், கிறிஸ்தவ, இந்து, சிங்கள இனங்களைச் சேர்ந்தோரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள.
நேற்று 20ம் திகதி வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்ட 8 உடல்களுடன் மொத்த தொகை 202 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.