சர்வதேச தொழிலாளர் தினம்


சர்வதேச தொழிலாளர் தினம் | 01.05.2021
உலக தொழிலாளர்களை கௌரவிக்கும் முகமாக இன்று உலகளாவிய ரீதியில் உழைப்பாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
பாடுபட்டு உழைப்போர்க்கே இவ்உலகம் சொந்தம் என்பது மூத்தோர் வாக்கு.

உலக இயக்கத்தின் அத்தனை அங்கங்களிலும் ஒரு தொழிலாளியின் முயற்சியும், அந்த முயற்சியின் வெளிப்பாடான வியர்வைத்துளிகளும் மிகப் பாரிய பங்கினை வகிக்கின்றது
இவ்வாறு பாடுபடும் தொழிலாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெறுகின்றதா என்பது ஆண்டாண்டு காலமாக முன்வைக்கப்படும் வினாவாக இருந்தும் இன்று வரை விடைகிடைக்காத புதிராகவே தொழிலாளர்களின் வாழ்க்கைப் பயணம் அமைந்துள்ளது.


இந்நிலையில் தொழிலாளர்களின் உழைப்பின் மகத்துவத்தினை நினைவுகூரும் விதமாகவும் ஆண்டில் ஒரு நாளேனும் தொழிலாளர்களை கௌரவப்படுத்தும் விதமாகவும் வருடத்தின் மே மாதம் முதலாம் திகதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகின்றது. இந்த உழைப்பாளர் தினம் அனைவருக்கும் விடுமுறை தினமாகவும் அமைகின்றது.


உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் மே முதலாம் திகதி உழைப்பாளர் தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.
இன்றைய உழைப்பாளர் தினத்தில் அனைத்து உழைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
புதியது பழையவை