இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த இளம் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த செயிலான் வீதி,கல்முனைக்குடி-03 என்ற முகவரியில் வசித்து வந்த இளம் தாய் சம்சுன் நிஹாரா வயது (30) என்பவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 20ம் திகதி பிரசவ வலி காரணமாக மட்டு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற போது வைத்தியரின் ஆலோசனைக்கமைவாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பெற்ற பின் குறித்த தாயின் உடநிலை காரணமாக அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த தாய் கல்முனை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணிபுரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதிவான் வி.தியாகேஸ்வரன் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை