கொஸ்கொட தாரக சுட்டுக்கொலை


பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த கொஸ்கொட தாரக எனும் சந்தேகநபர், துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொள்ளும் நிமித்தம், பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த சந்தேகநபர், இன்று13-05-2021 ம் திகதி அதிகாலை மீரிகமை – ரேந்தபொல பகுதிக்கு பொலிஸாரினால் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அடையாளந் தெரியாத நபர்களினால் இதன்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த சந்தேகநபர் காயமடைந்து மீரிகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பபட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், இந்த சம்பவத்தில் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் காயமடைந்து, வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, 34 வயதான கொஸ்கொட தாரக எனும் குறித்த நபர், 7 கொலை வழக்குகள் மற்றும் 21 கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு, விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்
புதியது பழையவை