கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை பிரதேசத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் வீதிகளில் உலாவித்திரிவோர், நடமாடும் வியாபாரிகள் என 50 பேருக்கு எழுமாறாக இன்று 25-05-2021 ம் திகதி அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் ஆலோசனையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர் அவர்களின் வழிகாட்டுதலில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஐ.எல் றாசிக் தலைமையில் சுகாதார பரிசோதர் குழு,காவற்துறை, இராணுவத்தினர் பங்களிப்புடன் இடம் பெற்றது.
இப் பரிசோதனையின் போது சுமார் 50 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று ஏற்படவில்லை என சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.