மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலிருந்து பொறியியல் துறைக்கு அதிகளவான மாணவர்கள்



வெளியாகியுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 13 மாணவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டு மகத்தான சாதனை படைத்துள்ளனர்.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இருந்து பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டள்ளமை இதுவே முதன் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் நான்கு மாணவர்கள் ”மெரிட்” அடிப்படையில் சித்தியடைந்துள்ளமை மாவட்டத்தில் மேலதிகமாக நான்கு மாணவர்கள் பொறியியற் துறைக்கு தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
புதியது பழையவை