மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் இன்று மேலும் ஐந்து கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் பல்வேறு பகுதிகளிலும் அன்டிஜன் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடி பகுதியில் இன்று அன்டிஜன் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
நேற்று திசவீரசிங்கம் சதுக்கம் பகுதியில் 11கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து இன்று காலை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் ஏனைய பகுதிகளில் சந்தேக நபர்களாக இனங்காணப்பட்டவர்களுக்கு இங்கு அன்டிஜன் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டனர்.
இதனடிப்படையில் கூழாவடி பகுதியில் 120பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஐந்து பேர் கொரனா தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்தார்.
இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 13பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் இதில் இருவர் வெளியிடங்களை சேர்ந்தவர்கள் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.