மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 32 பொலிஸாருக்கு கொரோனா கொவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, காத்தான்குடி பொலிஸ் நிலையம் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளதுடன், 32 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
50 பொலிஸார் இங்கு கடமையாற்றி வருகின்ற நிலையில், இன்று 26-05-2021ம் திகதி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் பொலிஸ் உத்தியோகத்தர் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் களுக்கு இன்று புதன்கிழமை அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பெரும் குற்றப் பிரிவு மற்றும் சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகள் உட்பட 32 பொலிசாருக்கு தொற்று உறதி கண்டறியப்பட்து