சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை கடத்திவந்த சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில், போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரால் இன்று கைது செய்யப்படடுள்ளார்.
ஓமானிலிருந்து வந்த இந்த சந்தேகநபர், நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான நபரொருவரென காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சுமார் 1.1 கிலோ நிறையுடைய இந்த தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதிய சுமார் 2 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது