அஸ்ட்ரா செனெகா, பைசர் நிறுவனங்களின் கொவிட்-19 தடுப்பு மருந்துகளைக் கலந்து பயன்படுத்தும் பெரியவர்கள், லேசானது முதல் மிதமானது வரையிலான பின்விளைவுகளுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
வெவ்வேறு தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளும்போது நடுக்கம் குளிர், தலைவலி, தசைவலி போன்ற பின்விளைவுகள் அதிகமான அளவில் ஏற்படுவதாகக் கூறப்பட்டது.
இருப்பினும், அந்தப் பின்விளைவுகள் குறுகியகாலத்துக்கே நீடிப்பதாகவும், வேறு பெரிய ஆபத்து ஏதும் இல்லை எனவும் ஆய்வு முடிவுகள் காட்டின.
வெவ்வேறு தடுப்பூசிகளைக் கலந்து பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து, ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி குழுமம் நடத்திய ஆய்வில் அந்த விபரங்கள் தெரியவந்தன.