மட்டக்களப்பு- மரப்பாலத்தில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்து



மட்டக்களப்பு- மரப்பாலம் பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 22 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

நேற்றிரவு 11.15 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு குழந்தையின் தந்தையான பீ. விஜிதரன் என்பவரே பலியானவரென அடையாளங்காணப்பட்டுள்ளது.

கித்துள் பகுதியிலுள்ள தனது தாயின் வீட்டிலிருந்து மரப்பாலம் பிரதேசத்திலுள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எருமை மாடு வீதியைக்குறுக்கிட்ட வேளை மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மாட்டுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளதுடன் மாடு அவ்விடத்திலேயே இறந்துள்ளது. இவரது சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
புதியது பழையவை