தங்களுடைய சொந்த வாகனத்தில் பயணிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
தனியார் வாகனத்தில் ஒன்றாக பயணம் செய்யும் போது, வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே முகக்கவசத்தை அணிய வேண்டும் என்றும், பணியகம் கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தொடர்பில் புதிதாக வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின்படி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த வாகனத்தில் பயணம் செய்யும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று வெளியான செய்தி தொடர்பில் விளக்கமளிக்கும் போதே, பணியகம் மேற்கண்ட அறிவித்தலை விடுத்துள்ளது.