முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட செம்மலை கிராமத்தில் இரண்டு யானைகள் பாழடைந்த கிணறு ஒன்றுக்குள் வீழ்ந்த நிலையில் வெளியில் வரமுடியாது தவிக்கின்றன.
குறித்த யானைகள் செம்மலையின் புளியமுனை பகுதியில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் கிணறு (துரவு) ஒன்றிலேயே விழுந்து சகதிக்குள் சிக்கியிருக்கின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.