மட்டக்களப்பு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் முன்மாதிரியான செயல்!



நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள 3ஆவது கொரோனா அலையானது மிக வேகமாக பரவி வருவதனால் நோயாளர்கள் பராமரிப்பு நிலையங்களின் தேவைகளும் அதிகரித்துள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

தனது வேண்டுகோளை ஏற்று புதிய பராமரிப்பு நிலையத்திற்கு தேவையான 6 மலசலகூடம், 6 குளியலறை வசதிகள் இணங்க மட்டக்களப்பை தலைமையகமாக கொண்டு இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமான AMCOR நிறுவனத்தினால் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட கரடியனாறு வைத்தியசாலையோடு இணைந்ததாக புதிய பராமரிப்பு நிலையமானது 60 கட்டில்கள் உள்ளடக்கக்கூடியதாக கரடியனாறு. தற்காலிக பராமரிப்பு நிலையமானது இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் கண்கானிப்பின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 14 ஆம் திகதி பராமரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக கரடியனாறு வைத்தியசாலையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அரச சார்பற்ற நிறுவனங்களிடம் அரசாங்க அதிபரினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க இவ்வசதிகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய நிறுவனங்களில் LIFT, WORLD VISION ஆகிய தொண்டு நிறுவனங்களும் பராமரிப்பு நிலையத்திற்கான சில உதவிகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறைவுறும் தருவாயில் உள்ள பராமரிப்பு நிலையமானது விரைவில் வைத்தியசாலை பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

புதியது பழையவை