முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி நேற்று அதிகாலை சேதமாக்கப்பட்டதுடன், நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினர்களும் தமது கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது கரி ஆனந்தசங்கரி தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் எண்ணற்ற இழப்புகளைச் சந்தித்த தமிழ் தேசத்திற்கு மே மாதம் துக்கம் மற்றும் பிரதிபலிப்பு நேரமாகும்.
இந்நிலையில், இலங்கை படைகளால் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான நினைவுதூபியை அழிக்கும் செயற்பாடு கண்டிக்கத்தக்க செயல்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.