மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் தனிமைப்படுத்தலுக்கான நோட்டிஸ் துண்டை தனிமைப்படுத்தப்பட்ட வீடு ஒன்றின் வாசல் கதவில் ஓட்டினர் இதன்போது குறித்த வீட்டின் உறவினர் ஒருவர் சுகாதார அதிகாரிக்கு தொலைபேசி ஊடாக தகாதவார்தைகளால் பேசி அரச கடமையை செய்யவிடாது பங்கம் விளைவித்துள்ளதாக அவருக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) மட்டக்களப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்
குறித்த பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பலபேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து குறித்த ஆடைத்தொழிற்சாலை எதிர்வரும் 6 ம் திகதிவரை மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த ஆடைத்தொழில்சாலையில் தொற்று உறுதி கண்டறியப்பட்ட ஊழியர்களுடன் நேரடி தொடர்பு உள்ளவர்களை பொது சுகாதார அதிகாரிகள் அவர்களுடைய பிரதேசங்களில் வீடுகளில் தனிமைப்படுத்தி வருகின்றனர்.
ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆடைத்தொழில்சாலையில் தொற்று உறுதி கண்டறியப்பட்ட ஊழியர்களுடன் நேரடி தொடர்பு உள்ளவர்களின் வீடுகளுக்கு சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) சுகாதார அதிகாரிகள் சென்று அவர்களை தனிமைப்படுத்தியதுடன் அவர்களின் வீட்டின் முன் வாசல் கதவில் தனிமைப்படுத்தப்பட்ட நோட்டிஸ் சுகாதார அதிகாரிகள் ஒட்டிவிட்டு சென்றுள்ளனர்
இதன்போது அந்த வீட்டின் உறவினர் ஒருவர் சுகாதார அதிகாரியின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அவருக்கு தகாதவார்த்தைகளால் பேசி எச்சரித்ததுள்ளதாக அவருக்கு எதிராக சுகாதார அதிகாரி மட்டக்களப்பு தலைமையக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
அதேவேளை சுகாதார அதிகாரியை கடமையை செய்யவிடாது தொலைபேசியில் அச்சுறுத்தியவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும் வரை வெளியில் சென்று சுகாதார நடவடிக்கையை மேற்கொள்வதில்லை எனவும் காரியாலயத்தில் மட்டும் கடமையாற்றுவதாக ஆரையம்பதி வைத்திய சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.