தனியார் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு


முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியார் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு மூன்றாம் கண்டம் பகுதியில் உள்ள வயல் காணியிலேயே கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை தண்ணிமுறிப்பு மூன்றாம் கண்டம் பகுதியில் வசிக்கும் இலிங்கேஸ்வரன் என்பவருடைய காணியிலேயே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வயல் காணிக்குள் கைக்குண்டு இருப்பதை அவதானித்த காணி உரிமையாளர் முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இந்நிலையில் முள்ளியவளை பொலிஸார் அந்த காணிக்கு சென்று கைக்குண்டை பார்வையிட்டதோடு நீதிமன்ற அனுமதியைப் பெற்று தகர்த்தழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்
புதியது பழையவை